
ஐநா செயலாளர் நாயகம் உலக நாடுகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்
மியன்மாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியடைந்துள்ளதை உறுதி செய்யுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரெஸ் (Antonio Guterres), உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள், நாட்டை ஆட்சி செய்வதற்கான வழிமுறை அல்ல என்பதை இராணுவத்தினர் புரிந்துகொள்ளும் வகையில் உலக நாடுகள் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சதி தோல்வியுற்றது என்பதை இராணுவத்தினருக்கு உறுதிப்படுத்த, சர்வதேச சமூகத்தை அணிதிரட்டுவதற்கு தம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார்