கருணாவுக்கு வந்துள்ள மற்றுமொரு ஆபத்து

கருணாவுக்கு வந்துள்ள மற்றுமொரு ஆபத்து

கருணா மீது யுத்தக் குற்றம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் அநுர மத்தேகொட தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

கருணா தெரிவித்த கருத்து தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் விரைவாக முறைப்பாடு செய்ய வேண்டும்.

யுத்தத்தில் ஏற்பட்ட மேலதிக பாதிப்புகள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை என்றாலும், அவரால் கொல்லப்பட்ட பிக்குகளினுடைய கொலைச் சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என அநுர மத்தேகொட தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அநுர மத்தேகொட மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கருணா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கருத்துக்கு பலரும் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

பலர் வழக்கு தொடர வேண்டும் என்று கோருவதுடன், ஐ.நா வரை இந்த சம்பவம் சென்றுள்ளது.

மேலும் சி.ஐ.டியில் 7 மணித்தியாலம் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் அநுர மத்தேகொட தெரிவித்துள்ள கருத்து கருணாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.