அவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக 100க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்..!
அவுஸ்திரேலியாவின் மேற்கு நகரமான பேர்த் இல் தொடர்ந்து பரவிவரும் காட்டுத்தீ காரணமாக 100க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த காட்டுத்தீயினால் இதுவரை 71க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நகரின் மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு நேற்றைய தினம் காட்டுத்தீ பரவியிருந்த நிலையில், தற்போது 9 ஆயிரம் ஹெக்டயர் வனப்பகுதி அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேர்த் நகரம் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு 200க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படையினர் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த பணிகளின் போது 6 தியணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.