கட்டுநாயக்க தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது..!
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் இன்று அதிகாலை 4 மணி முதல் ஏற்பட்ட நிலையில், பல மணி நேரங்களுக்கு பின்னர் அது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு வலையம், தீயணைப்பு படை மற்றும் விமானப்படையினருக்கு சொந்தமான 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்ததாக அந்த வலையத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த தொழிற்சாலையின் கழிவு முகாமைத்துவ பிரிவில் இந்த தீ ஏற்பட்டதுடன், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது