காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்... இதனால் இவ்வளவு நன்மைகளா?

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்... இதனால் இவ்வளவு நன்மைகளா?

இந்த உணவுகள் நாள் முழுவதும் உங்கள் ஜீரண சக்தியைச் சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு சுறுசுறுப்பு தரும்.

இந்திய இல்லங்களில் காலை எழுந்ததுமே டீ அல்லது காஃபி தான் முதல் உணவாக இருக்கும். சிலர் அதோடு பிஸ்கட், ரஸ்க் என சாப்பிடுவார்கள். ஆனால் எழுந்ததுமே வெறும் வயிற்றில் டீ , காஃபி நல்லதல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தேன் மற்றும் வெதுவெதுப்பான நீர்

இவ்வாறு குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் உங்கள் ஜீரண சக்தி சீராக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கூடவே கொஞ்சம் எலுமிச்சை சாறும் பிழிந்துவிட்டுப் பருகலாம்.

ஊற வைத்த பாதாம்

இதில் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை அளிக்கின்றன. நாள் முழுவதும் விரதம் இருந்தாலும் 5-10 பாதாம் சாப்பிட்டால் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும்.

நெல்லிக்காய் ஜூஸ்

நீண்ட நாள் வாழக்கூடிய வாய்ப்பு வேண்டுமெனில் அது நெல்லிக்காய் மூலம் கிடைக்கிறது. நெல்லிக்காயில் உள்ள அல்கலைன் ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்து உறுதியாக்குகிறது. உங்கள் சருமமும் ஹெல்த்தியாக இருக்கும்.

benefits of amla: Amla benefits: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்  குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்... - amazing benefits of amla juice for skin  and healthy | Samayam Tamil

பப்பாளி

கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பப்பாளி சிறந்தது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவும். பப்பாளி சாப்பிட்டால் 1 மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.

தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!

சியா விதைகள்

இந்த சீயா விதைகளில் உடலுக்குத் தேவையான 9 வகையான அமினோ ஆசிட் உள்ளன. அதோடு ஃபேட்டி ஆசிடும் உள்ளது. எனவே ஒரு ஸ்பூன் இரவு ஊற வைத்து மறுநாள் காலை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் , ஓட்ஸ் என கலந்து சாப்பிடலாம்.

3 amazing beauty benefits of chia seeds you never knew about! | Samayam  Tamil Photogallery

தர்பூசணி

தர்பூசணியை காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதுதான் சிறந்த தருணம் என்கின்றனர். ஏனெனில் அதில்தான் உடல் சுறுசுறுப்பிற்கு தேவையான எலக்ட்ரோலைட்ஸ், ஊட்டச்சத்து, நீர்ச்சத்து என அனைத்தும் உள்ளது.

கோடைக் காலத்தில் குளிர்ச்சி தரும் தர்பூசணி பழம்....!

பேரிச்சை

ஒரு நாளை துவங்க பேரிட்சை நல்ல உணவுப் பொருள். செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் இருந்தாலும் காலையில் சாப்பிடுவது நல்லது. பொட்டாசியம் இருப்பதால் வயிற்றுக் கோளாறுகளுக்கும் நல்லது.

தொப்பையை குறைக்க உதவும் பேரிச்சம் பழம் - Seithi Saral

நெய்

நெய் சாப்பிட்டால் அப்படியே சாப்பிடக்கூடாது. அதோடு பட்டை பொடியைக் குழைத்து சாப்பிடலாம். வேப்பிலையை குழைத்து சாப்பிடலாம். ஆயுர்வேதத்தின் படி இது உடலை குளிர்ச்சியாக்கும். இதை சாப்பிட்டதும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். இதை சாப்பிட்டதும் குறைந்தது அரை மணி நேரமாவது எதுவும் சாப்பிடக் கூடாது.

நெய் பயன்படுத்தி உங்கள் முகத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்..? | usages of  the ghee when you applying in your face– News18 Tamil