
பேர்த் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்..!
அவுஸ்திரேலியாவின் மேற்கு நகரமான பேர்த் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
குறித்த நகரின் மேற்கு பகுதியில் உள்ள மலைத்தொடரில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுத்தீ பரவியுள்ளதுடன் அதனை கட்டுப்படுத்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்புப்படையினர் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
பேர்த் நகரம் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன