உரு திரிபடைந்த கொரோனா ரைவஸ் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

உரு திரிபடைந்த கொரோனா ரைவஸ் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உரு திரிபடைந்த கொரோனா ரைவஸ் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் டிசம்பர் மாதம் உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

பல சர்வதேச நாடுகள் அந்த நாட்டுடனான தமது விமான போக்குவரத்து சேவைளை தற்காலிக இடைநிறுத்தியுள்ளன.

குறித்த உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது.

இதனால், பிரித்தானியாவில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரித்தானியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உரு திரிபடைந்த கொரோனா ரைவஸ் இதுவரை 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வேன் கெர்கோவ் (Maria Van Kerkhove) ஆலோசனை கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா வைரஸ் 39 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 9 நாடுகளில் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்