முதல்முறையாக கடலுக்கு அடியில் கல்யாணம் செய்த ஜோடி :

முதல்முறையாக கடலுக்கு அடியில் கல்யாணம் செய்த ஜோடி :

இந்தியாவில் முதல் முறையாக இந்து முறைப்படி ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட ஜோடியின் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னதுரை. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்படதை அடுத்து இவர் தனது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

 

இது குறித்து பெற்றோரிடம் சம்மதம் பெற்றனர். இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரான அரவிந்தை தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதற்காக முறையாக நீச்சல் பயிற்சியை இருவரும் கற்றுக்கொண்டனர்.

பின்னர் சின்னதுரை, ஸ்வேதா திருமணம் இந்து முறைபடி நீலாங்கரை கடற்கரையில் 60அடி ஆழத்தில் அலங்காரம் செய்யப்பட்ட வளைவுக்குள், சின்னத்துரை தங்க மங்கல நாண் அணிவித்து பின் ஜோடிகள் இருவரும் மாலை மாற்றி கொண்டு தங்கள் திருமணத்தை செய்து கொண்டனர்.

இன்று காலை ஆழ்கடலில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஆழ்கடல் நிச்சல் பயிற்சியாளர் அரவிந்த் செய்திருந்தார். இந்தியாவில் ஆழ்கடலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.