மகாராஷ்டிராவில் போலீஸ் துறையைச் சேர்ந்த 2,557 பேர் கொரோனாவால் பாதிப்பு

மகாராஷ்டிராவில் போலீஸ் துறையைச் சேர்ந்த 2,557 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போலீஸ் துறையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதேவேளையில் கொரோனா வைரஸ் தொற்றால் அவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருவர் உயிரழந்துள்ளார்.

பாதுகாப்பு பணியில் மகாராஷ்டிரா போலீஸ்

தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் போலீஸ் துறையைச் சேர்ந்த 2,557 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை போலீஸ் துறை தெரிவித்துள்ளது.