64 வயதான பெண் ஒருவரை கொலை செய்த 18 வயது இளைஞன்

64 வயதான பெண் ஒருவரை கொலை செய்த 18 வயது இளைஞன்

மாவனெல்ல பகுதியில் 64 வயதான பெண் ஒருவரை, 18 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் தனது வீட்டில் தமது உறவினர்களுடன் இருந்த சந்தர்ப்பத்தில், குறித்த ஆண் திடீரென வந்து பெண்ணின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே, குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் மற்றுமொரு பெண் காயமடைந்து, மாவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சந்தேகநபர் தொடர்ச்சியாக தமது குடும்பத்திற்கு இடையூறுகளை விளைத்திருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை அடுத்து, மாவனெல்ல பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளதுடன், இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவுளை குறித்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகி உள்ளது