அதிகரித்த கொரோனாத் தாக்கம்! இங்கிலாந்துக்கான விமான சேவையை ரத்து செய்யதது அமீரக அரசு

அதிகரித்த கொரோனாத் தாக்கம்! இங்கிலாந்துக்கான விமான சேவையை ரத்து செய்யதது அமீரக அரசு

இங்கிலாந்து மற்றும் அமீரகம் இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நாடானது கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சிவப்பு பட்டியலில் உள்ள ரூவாண்டா மற்றும் புரூண்டி ஆகிய நாடுகளிலிருந்து விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது.

இந்தநிலையில், அமீரகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இங்கிலாந்து நாடானது அமீரகத்தையும் சிவப்பு பட்டியலில் செர்த்துள்ளது. இதனால் அமீரகம் - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து சேவை அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அமீரகத்தில் உள்ள இங்கிலாந்து நாட்டு பயணிகள், தாயகம் திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இதில் ஒருசிலர் முன்பதிவு செய்து இருந்தும் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இதையடுத்து இங்கிலாந்து நாட்டு பயணிகளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க அமீரக அரசு, விசிட் விசாவை கட்டணமில்லாமல் நீட்டித்துக்கொள்ளலாம் என நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பலர் தங்கள் விசாவை மேலும் ஒரு மாதம் வரை நீட்டித்துள்ளனர்.