
இலங்கைக்கு வந்த கொரோனா தடுப்பூசி! நேரடியாகச் சென்று பெற்றுக் கொண்ட கோட்டாபய
இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு இந்திய சிறப்பு விமானம் இன்று முற்பகல் 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கொவிட்-19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே ஆகியோர் நேரடியாகச் சென்று பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்திய விமான சேவைக்கு சொந்தமான A I - 281 விமானத்தின் ஊடாக இன்று காலை 11.35 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
42 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வந்திறங்கிய தடுப்பூசி நாளை முதல் கொழும்பை சுற்றியுள்ள ஆறு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.