இன்றைய ராசி பலன்கள் 28/01/2021

இன்றைய ராசி பலன்கள் 28/01/2021

மேஷம்

வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து நல்ல தகவல் வரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

ரிஷபம்

தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். வரவு திருப்தி தரும்.

மிதுனம்

ஆரோக்கியத்தில் அக்கறைகாட்ட வேண்டிய நாள். தொழில் ரீதியாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம்.

கடகம்

சஞ்சலங்கள் அகல சண்முகநாதரை வழிபட வேண்டிய நாள். திறமை பளிச்சிடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி யொன்று வந்து சேரலாம்.

சிம்மம்

வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வீர்கள். நட்பால் நன்மை கிட்டும்.

கன்னி

ஆதாயத்தை விட விரயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனுக்காக எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது.

துலாம்

சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத தனலாபம் வந்து சேரலாம். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும்.

விருச்சகம்

காரிய வெற்றிக்கு கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பொது வாழ்வில் புகழும் கூடும்.

தனுசு

பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். பொது நலத்தில் ஈடுபடும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. விரயங்களைச் சமாளிக்க நண்பர்களின் உதவியை நாடுவீர்கள்.

மகரம்

குறைகள் அகலக் குகனை வழிபட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக முடியும். வரவு திருப்தி தரும்.

 

மீனம்

முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கிடைக்கும் நாள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும். தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள்.