கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 653 பேர் குணமடைந்தமையை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதற்கமைய தொற்றுறுதியான 50 ஆயிரத்து 337 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர்களில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.