மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் மாவட்ட காாியாலய சேவைகள் இடைநிறுத்தம்...!
கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள எச்சரிக்கை நிலையை கருத்திற்கொண்டு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் அநுராதபுர மாவட்ட காாியாலய சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த நிறுவனத்தின் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக உாிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அநுராதபுர மாவட்ட காரியாலயத்தை வெகு விரைவில் மீள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் சீ. அலஹகோன் தொிவித்துள்ளார்.