தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி...!

தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி...!

கடந்த வருடம் உள்நாட்டில் தேயிலை உற்பத்தி 278.4 மில்லியன் கிலோகிராம் என பதிவாகியுள்ளதுடன், 21 ஆண்டுகளில் பதிவான ஆகக்குறைந்த உற்பத்தி அளவாக இது காணப்படுகின்றது.

தரகு நிறுவனங்களின் அறிக்கைகளின் படி, இதற்கு முதல் மிகக் குறைந்த தேயிலை உற்பத்தி 1997 இல் பதிவாகியுள்ளது.

அதன் அளவு 276 மில்லியன் கிலோகிராம் ஆகும்.

இலங்கையில் ஆண்டுதோறும் தேயிலை உற்பத்தி 340 மில்லியன் கிலோகிராமாக அதிகரித்த போதிலும், கடந்த ஆண்டு தேயிலை உற்பத்தி படிப்படியாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான வரட்சியான வெப்பநிலையே தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

வேளாண் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நாட்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைய காலநிலை மாற்றம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.