‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூஸ் சொன்ன செல்வராகவன்

புதுப்பேட்டை 2 பட எப்போது உருவாகும் என்பது குறித்து இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்க என்ன என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த தனுஷ் - செல்வராகவன் கூட்டணி, தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்க உள்ளார். இதுதவிர தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படமும் தயாராக உள்ளது. 2024-ம் ஆண்டில் தான் இப்படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.

 

செல்வராகவன்

 

இந்நிலையில், ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படங்களுக்கு இடையில் ‘புதுப்பேட்டை 2’ படத்தை எடுக்க உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த தனுஷ் - செல்வராகவன் கூட்டணி தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் இணைந்து பணியாற்ற உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.