கைதான டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியான தகவல்; நீதிவான் முன்னிலையில்

கைதான டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியான தகவல்; நீதிவான் முன்னிலையில்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (27) நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

கம்பஹா நீதிவான் முன்னிலையில் டக்ளஸ் தேவானந்தா இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைதான டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் வெளியான தகவல்; நீதிவான் முன்னிலையில் | Douglas Devananda Produced Court Todayமுன்னதாக, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா - வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.

குறித்த துப்பாக்கி, டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டது எனபொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அது தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.