மட்டக்களப்பு மக்களை அச்சுறுத்திய முதலை உயிரிழப்பு

மட்டக்களப்பு மக்களை அச்சுறுத்திய முதலை உயிரிழப்பு

மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த இராட்சத முதலையொன்று, உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் இன்று (27) உயிரிழந்த இராட்சத முதலை கரையோதுங்கியுள்ளது.

மட்டக்களப்பு மக்களை அச்சுறுத்திய முதலை உயிரிழப்பு | Crocodile Threatened People Of Batticaloa Has Diedசுமார் 15 அடி நீளமுடைய இந்த இராட்சத முதலை, மட்டக்களப்பு வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இறந்த முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளமை குறிப்பிடப்படுகிறது.