இன்றைய ராசி பலன்கள் 22/01/2021

இன்றைய ராசி பலன்கள் 22/01/2021

மேஷம்

வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார விருத்தி உண்டு. நண்பர்கள் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு பாராட்டுவர்.

ரிஷபம்

தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் உண்டு.

மிதுனம்

சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்

இன்றைய ராசி பலன்களதொழில் வளர்ச்சி கூடும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். உங்கள் கருத்துகளை பலரும் கேட்க முன்வருவர். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

சிம்மம்

போட்டிகளில் வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் பகை மாறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். கடன் சுமை குறையும்.

கன்னி

காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம்.

துலாம்

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். துணிவும், தன்நம்பிக்கையும் கூடும். வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

விருச்சகம்

வெற்றிப்படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். வரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர். கடல் தாண்டி வரும் செய்தி காரியவெற்றிக்கு கைகொடுக்கும்.

தனுசு

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகரம்

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும். பெரியோர்களின் ஆலோசனை நன்மை தரும். கிளைத் தொழில்கள் தொடங்கும்முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

வரவும்-செலவும் சமமாகும் நாள். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். சேமிப்பு செலவாகாதிருக்க விழிப்புணர்ச்சி தேவை. சமுதாயப்பணியில் ஆர்வம் கூடும்.

மீனம்

விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும் நாள். புத்திசாலித்தனமாக செயல்பட்டு புகழைக் கூட்டிக் கொள்வீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.