நயினாதீவு செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறித்தல்!
நயினாதீவிற்கு செல்வதற்காக கொண்டுவரப்பட்ட புதிய பாஸ் நடைமுறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் நீக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறையினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் இவ்விடயம் தொடர்பில் தொலைபேசியில் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,
எம்மால் அவ்வாறான எந்தவித பாஸ் நடைமுறை மற்றும் மட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
இவ்வாறான செயற்பாடுகள் அங்கு இடம்பெறின் இது தொடர்பில் உடனடியாவே அதனை நிறுத்துமாறு நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் உப பொலீஸ் நிலையங்களுக்கு அறிவிக்கிறேன்.
இவ்வாறான மட்டுப்பாடுகளை இனி விதிக்கமாட்டோம் எனவும் குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவில் உள்ள உப காவலரண்களின் கவனத்துக்கும் இவ்விடயம் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு செல்லும் பயணிகள் சுமூகமான தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாமென ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.