கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்படவுள்ள இலங்கை - சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்படவுள்ள இலங்கை - சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

உலகம் முழுவதும் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக சுற்றுலா துறைக்கு அரசாங்கம் இந்த நிவாரண பெக்கேஜ் வழங்குகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்று கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இலங்கை கொரோனாவிடம் விடுதலை பெற்ற நாடு என கூறுவதன் மூலமே சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.

உண்மையாகவே தற்போது இலங்கை கொரோனா அற்ற நாடாகும். எங்களுக்கு ஐரோப்பா ஒன்றியத்தால் 3.5 டொலர் மில்லியன் நிதி வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.

அந்த பணத்தை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.