உந்துருளி உரிமையாளர்களுக்கான விசேட அறிவிப்பு..!
உந்துருளிகள் கொள்ளைச்சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் உந்துருளிகள் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திட்டமிடப்பட்ட ஒரு குழுவினால் இந்த கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உந்துருளி பாவனையாளர்கள் உந்துருளிகளை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.