பாலர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி...!காணொளி

பாலர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி...!காணொளி

நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் சுகாதார அமைச்சு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய மீண்டும்  ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலை ஆசிரியர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி இந்த பாலர் பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.