அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த ஒரு புறாவை கொலை செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் தீர்மானம்...!

அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த ஒரு புறாவை கொலை செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் தீர்மானம்...!

அமெரிக்காவிலிருந்து பசுபிக் பெருங்கடலின் வழியில் 15,000 கி.மீ தாண்டி அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த ஒரு புறாவை கொலை செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர்.

தற்போது காணப்படும் கொவிட் 19 பரவல் காரணமாக புதிதாக சுகாதார ஆபத்து ஏற்படக்கூடும் என்று முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து 15,000  கி.மீ தொலைவில் பசுபிக் பெருங்கடலை கடந்து வந்த கப்பலின் மூலம் பயணித்து குறித்த புறா அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.

குறித்த புறாவை மெல்பர்னில் வசிப்பவர் ஒருவர் பிடித்துள்ளதுடன்இ பறவையின் காலில் இணைக்கப்பட்ட ஒரு குறியீட்டு குறிச்சொல் பறவை அமெரிக்காவைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

'ஜோ த பிஜன்' என்று பிரபலமாக அறியப்பட்ட இந்த பறவையை கொல்ல அவுஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த பறவையை கொல்ல அவுஸ்திரேலியாவினால் எடுக்கப்பட்ட முடிவு மறுபரிசீலனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.