அனுருத்த பாதெனியவுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதி...!

அனுருத்த பாதெனியவுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதி...!

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் அனுருத்த பாதெனியவுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

தமது வீட்டில், கடந்த தினம் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்ட வைத்தியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.