மீண்டும் திறக்கப்பட உள்ள கல்வி நிலையங்கள்..!
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் வேளையில் பிரிவெனாக்கள் மற்றும் வித்தியாலயாக்கள் போன்ற கல்வி நிறுவனங்களை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட இந்த கல்வி நிலையங்கள் 04 கட்டங்களாக மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்படி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 03ஆம் திகதி வரை அனைத்து ஆசிரியர்களும் குறித்த கல்வி நிலையத்திற்கு வருகை தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டாம் படிமுறைப்படி 100க்கும் குறைந்தளவிலான மாணவர்களை உள்ளடக்கிய பிரிவெனாக்கள் மற்றும் வித்தியாலயாக்களில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.