'ஈஸ்வரன்' இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

'ஈஸ்வரன்' இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று சுசீந்திரன் இல்லத்தில் நடந்த சோக நிகழ்வால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

’ஈஸ்வரன்’ இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி என்பவர் மாரடைப்பால் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 62. ஈஸ்வரன் திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாகவும் நல்ல வரவேற்பு காரணமாகவும் மகிழ்ச்சியில் இருந்த சுசீந்திரன் குடும்பத்தில் திடீரென ஒரு சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளதால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்த நிலையில் தாயாரை இழந்து வாடும் சுசீந்திரன் அவர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் பலர் நேரில் சென்று சுசீந்திரன் தாயாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.