டெங்கு நோய் பரவும் அபாயம்...!
சமூகத்தில் கட்டுமான பணிகள் இடம்பெறும் இடங்களில் டெங்கு நோய் தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், கட்டுமான பணிகள் இடம்பெறும் இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து இந்த பகுதியில் டெங்கு நோய் பரவுவதற்கான 75 வீத சாத்தியகூறுகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு நோய் தொற்று ஏற்ப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் இதனால் பொது மக்கள் அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாநகர சபைக்குற்ப்பட்ட பகுதிகளிலும்,களுத்துறை,கம்பஹா,காலி,மாத்தரை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் உள்ள கட்டுமான பணிகள் இடம்பெறும் இடங்களில் விசேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.