கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்து இரண்டாம் ஆண்டான இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட மிகவும் ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் அவசர சேவைகளின் தலைவர் வைத்தியர் மைக் ரியான் ஜெனீவா நகரில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது, மிக வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸினால் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 2.8 பில்லியனைத் தாண்டியுள்ளதுடன், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டங்கள் உலகின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டாலும், இந்த ஆண்டு வைரஸுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்பார்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு அண்மையில் குறிப்பிட்டிருந்தது.