இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இலங்கை முதல் இன்னிங்சில் 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது...!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இலங்கை முதல் இன்னிங்சில் 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது...!

காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு ஆட்டமிழந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களினால் இலங்கை அணியின் மூன்று துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ், தில்ருவன் பெரேரா மற்றும் லசித் அம்புல்தெனிய ஆகியோர் எந்தவித ஓட்டங்களையும் பெறாமல் ஆட்டமிளக்கப்பட்டனர். .

முதல் இன்னிங்சில் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும், அஞ்சலோ மேத்யூஸ் 27 ஓட்டங்களையும், தசுன் சானக்க 23 ஓட்டங்களையும், குசல் பெரேரா 20 ஓட்டங்களையும், வனிது அசரங்க 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இங்கிலாந்தி அணியின் பந்து வீச்சளர்களான டோம் பெஸ் 5 விக்கெட்டுகளையும்இ ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.