ஜல்லிக்கட்டு போட்டியில் கத்திக்குத்து

ஜல்லிக்கட்டு போட்டியில் கத்திக்குத்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

வாடிவாசல் வழியாக சீறிப் பாயும் காளைகளின் திமிலை மாடுபிடி மாடுபிடி வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. சில காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடின. 

காளையின் வருகைக்காக வாடிவாசலில் காத்திற்கும் வீரர்கள்.

 

காளைகளை அவிழ்த்து விடுவதில் ஏற்பட்ட தகராறில் அருண்குமார், தெய்வேந்திரனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. காளைகளை அவிழ்த்துவிட வரிசையில் நின்றபோது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கத்திக்குத்தில் காயமடைந்த 2 பேரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.