எட்டு மாதங்களுக்கு பின் சீனாவில் பதிவாகியுள்ள கொரோனா மரணம்...!

எட்டு மாதங்களுக்கு பின் சீனாவில் பதிவாகியுள்ள கொரோனா மரணம்...!

கொரோனா தொற்று சீனாவில் ஆரம்பிக்கப்பட்டாலும் அதை தற்போது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள சீனா பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

எனினும் எட்டு மாதங்களுக்கு பின் சீனாவில் நேற்று கொரோனா மரணமொன்று பதிவாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் குழுவொன்று கொரோனா வைரஸின் ஆரம்பம் குறித்து ஆராய சீனாவிற்கு வருகை தர இருப்பதனால், கொரோனா வைரஸினால் இன்னொரு கொத்தணி உருவாவதை தடுக்க சீனா தற்போது பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 138 புதிய கொரோனா தொற்றாளர்கள் சீனாவில் பதிவாகியுள்ளனர்.

இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின் அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையாகும்.