கிளர்ச்சியை தூண்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செயற்பட்டதாக குற்றச்சாட்டு..!

கிளர்ச்சியை தூண்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செயற்பட்டதாக குற்றச்சாட்டு..!

அமெரிக்காவின் தலைநகர் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற கிளர்ச்சியை தூண்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செயற்பட்டதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

குடியரசு கட்சியின் 10 உறுப்பினர்கள் டொனால்ட் ட்ர்மப்க்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு ஜனநாயக கட்சியினருக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்தநிலையில் அவருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவாக 232 வாக்குகளும் எதிராக 197 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, இரண்டு தடவைகள் குற்றப்பிரேரனை நிறைவேற்றப்பட்ட முதலாவது அமெரிக்க ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.