மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு வரலாம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு வரலாம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.

* தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.

* வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.

* வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.

* ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

* 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.

* பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.

* மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.