மத்திய பிரதேசம்: விஷ சாராயம் குடித்த 10 பேர் பலி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் மொரினா மாவட்டம் பஹவாலி மற்றும் மன்பூர் கிராமங்களை சேர்ந்த 18-க்கும் அதிகமானோர் நேற்று இரவு விஷ சாராயம் குடித்துள்ளனர்.

 

 

விஷசாராயம் குடித்த அனைவருக்கும் இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.


இதையடுத்து, விஷசாராயம் குடித்து உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்தவர்கள் 8 பேர் மீட்கப்பட்டு மொரினா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

விஷசாராயம் குடித்தவர்களில் 10 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.