
பல மாகாணங்களில் கடும் மழை பொழியக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்;கூடும்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றும் 150 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தின் ஊடாக மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழைபெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.