
சீனாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு...!
சீனாவில் நேற்று 103 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஜூலை மாதம் அதாவது 5 மாதங்களுக்கு முன் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதுடன், 85 பேர் உள்நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களாவர்.
ஹூபேயில் 82 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றின் பரவல் ஹூபே பிரதேசத்தின் வூஹான் நகரிலிருந்தே ஆரம்பித்ததாக அனைவரும் நம்புகின்றனர்