
சர்வதேச ரீதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 09 கோடியை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சர்வதேச ரீதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,074,446 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றால் உலகளவில் 1,934,813 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 64,463,359 பேர் தற்சமயம் குணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உலக நாடுகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா காணப்படுவதுடன்,இரண்டாவது இடத்தில் இந்தியா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்