இலங்கையில் எந்த பகுதியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம்! பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் எந்த பகுதியில் இருந்தாலும் தண்டனை நிச்சயம்! பொலிஸார் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 2,213 பேருக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையில் 2361 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 2,213 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

மேல் மாகாணத்தை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்று மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டமைக்காக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் எந்த பகுதிகளில் இருந்தாலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை கடைப்பிடிக்கவேண்டியது கட்டாயமாகும். மீறினால் தண்டனை நிச்சயம்.

பொது போக்குவரத்துக்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் அதன் இலக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.