பராக்கிரமபாகு சமுத்திரத்தில் வீழ்ந்த பேரூந்து..! 23 பேர் மருத்துவமனையில்
பொலனறுவை - லங்காபுர கேகளுகம பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை சேவையாளர்கள் பயணித்த பேருந்து ஒன்று பராக்கிரம சமுத்திரத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 23 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்கள் பொலனறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வாகன விபத்துக்களில் நேற்றைய தினம் மாத்திரம் 9 பேர் உயிரிழந்தனர்.
நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேரும், முன்னதாக இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு பேரும் உயிரிழந்ததாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.



