
டொனால்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அவரது கணக்கு மற்றும் பதிவுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டொனால்ட் ட்ரம்ப்பின் டுவிட்டர் கணக்கை 12 மணித்தியாலங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் அவர் தளத்தின் விதிகளை மீண்டும் மீறினால் அவரது கணக்கு முற்றாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவர் நேற்றைய தினம் பதிவிட்ட சில பகுதிகள் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தேசபக்தர்கள் என அழைநத்திருந்தார்.
இதனையடுத்து அவரது டுவிட்டர் கணக்கை ரத்து செய்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தலைமையகம் என்று அழைக்கப்படுகின்ற வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்தின் மீது, ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் வெற்றிபெற்றதாக, அமெரிக்க காங்கிரஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவிருந்த நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.