தயாசிறியின் குடும்ப உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை

தயாசிறியின் குடும்ப உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் அவரது அலுவலகத்திற்கு தொற்று நீக்கும் பணிகள் செய்யப்பட்டன.

புத்தாண்டு தினமான கடந்த முதலாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தயாசிறி ஜயசேகர கலந்து கொண்டிருந்தார்.

அந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.