தமிழ் மக்கள் இதனை கண்டிப்பாக செய்யவேண்டும்! சம்பந்தன் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் மக்கள் இதனை கண்டிப்பாக செய்யவேண்டும்! சம்பந்தன் விடுத்துள்ள கோரிக்கை

தமிழ் மக்கள் சார்பில் ஒரு பலம் வாய்ந்த அணி நாடாளுமன்றம் செல்ல வேண்டியதன் முக்கிய அவசியம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

கேள்வி: நீங்கள் ஒரு அறிக்கையொன்று வெளியிட்டிருக்கின்றீர்கள் அரசியல் தீர்வு திட்டம் அமுல்படுத்துவதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தீர்கள். உங்களுடைய ஆதரவு இந்த தீர்வுத் திட்டம் எப்பொழுது கிடைக்கும் வரை ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளீர்கள் அல்லது அதற்கான கால அவகாசம் எதுவும் உள்ளதா?

பதில்: ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு தேசிய பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இந்த கருமம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம். சென்ற நாடாளுமன்றம் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் தேசிய சபையாக நிறைவேற்றி மாற்றியமைப்பதற்கு. பல உப குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த விடயம் சம்பந்தமாக எல்லோருடைய ஒற்றுமையுடன் பல கருமங்கள் முன்னெடுக்கப்படும்.

ஆன படியால் இதே நாங்கள் ஈடுபட்ட ஒரு விடயம் எல்லோரும் ஈடுபடுகின்ற ஒரு விடயம். எல்லோரும் நிறைவேற்ற வேண்டும் என்று ஏற்றுக்கொண்ட ஒரு விடயம். ஆன படியால் எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு விடயம்.

சமீபத்தில் தற்போதயை பிரதமர் ராஜபக்ச அவர் கூறியிருக்கின்றார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு நாங்கள் நாடு பிளவுபடாமல் ஒரு தீர்வைக் காணுவோம் என்று கூறியிருக்கின்றார்கள்.

அதே கருத்து தான் ஐக்கிய தேசியக் கட்சியும் கூறியிருக்கின்றது. அதே கருத்தை தான் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கின்றார். அதே கருத்தைத் தான் சஜித் பிரேமதாசாவும் கூறியிருக்கின்றார். தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் பிரேமதாசா தெளிவாக கூறியிருக்கின்றார்.

அந்த விடயத்தைப் பொறுத்தவரையில் எந்த விடயமான கருத்து வேறுபாடும் இல்லை. அதை நிறைவேற்றுவது தான் முக்கியம் அதை நிறைவேற்றுவதற்கு இந்தத் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய வாக்குறுதிகளை தந்திருக்கின்றார்கள். அவை அனைத்தும் பதிவில் இருக்கின்றது.

சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றார்கள். அவைகள் எல்லாம் பதிவில் இருக்கின்றது.

விசேசமாக இந்தியாவிற்கு, அமெரிக்காவிற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, நோர்வேயிற்கு, ஜப்பானிற்கு, ஐக்கிய இராச்சியத்திற்கு எல்லாம் முக்கியமான நாடுகளுக்கு வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றார்கள்.

ஆன படியால் இவை எல்லாத்தையும் ஒன்றாக சேர்த்து இந்த கருமத்தை முன் வைப்பதாக இருந்தால் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பலம் வாய்ந்த அணி நாடாளுமன்றம் செல்ல வேண்டிய முக்கிய அவசியம்.

ஒருமித்து ஒற்றுமையாக தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை தமிழ் தேசிய கூட்டணிக்கு அளித்து அதன் மூலமாக இது தான் எங்களுடைய நிலைப்பாடு என்ற செய்தியை நாட்டிற்கும் உலகத்திற்கு தெளிவுபடுத்திக் காட்ட வேண்டும்.

அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று மிகவும் அன்பாகவும் வினயமாகவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.