100 அடி பள்ளத்தில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி! மூவர் படுகாயம்

100 அடி பள்ளத்தில் தடம்புரண்ட முச்சக்கரவண்டி! மூவர் படுகாயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி, இன்று மாலை தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

முச்சக்கரவண்டியின் சாரதி நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றைய இருவர் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.