
உங்களின் பெயரும் உள்ளதா? பரீட்சித்துக் கொள்ளுங்கள் - தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை
கடந்த 2020ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் தேருநர் ஒருவராக பதிவு செய்து கொள்வதற்காக சிபாரிசு செய்துள்ள நபர்களின் பெயர்களை www.elections.gov.lk என்ற இணையத்திளத்தில் பரீட்சித்துக்கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாரேனும் ஒருவரின் பெயர் அவ்விடாப்பில் பதிவு செய்வதற்கு சிபாரிசு செய்யப்படவில்லையெனின் குறித்த நபரின் பெயரை தொடர்புடைய பிரதேசத்தை கிராம அலுவலர் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களின் ஊடாக 2021.01.19 ஆம் திகதிக்கு முன்னர் கடமை நாட்களில், கடமை நேரங்களுக்குள் வினவுவதன் மூலம தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்த்துக் கொள்வதற்கான உரிமைக்கோரலொன்றை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
011-2860031, 011-2860032 மற்றும் 011-2860034 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.