கொழும்பு வாழ் மக்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்
கொழும்பின் பல பகுதிகளில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பிரதான குழாயில் திருத்தப்பணிகளை மேற்கொள்வதாலேயே இந்த நிலை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆகவே மக்கள் இது தொடர்பில் முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.