வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்ட மக்கள்..!

வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்ட மக்கள்..!

ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் வெற்றிபெற்றதாக, அமெரிக்க காங்கிரஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன் கமலா ஹெரிசை உப ஜனாதிபதியாகவும் அமெரிக்க காங்கிரஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹெரிசும் எதிர்வரும் 20 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜோ பைடன் வெற்றிபெற்றதாக, அறிவிக்கவிருந்த நிலையில் வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது