எத்தனோல் இறக்குமதிக்கு தடை விதித்தது ஸ்ரீலங்கா அரசாங்கம்

எத்தனோல் இறக்குமதிக்கு தடை விதித்தது ஸ்ரீலங்கா அரசாங்கம்

ஸ்ரீலங்காவுக்கு தேவையான எத்தனோல் இனிமேல் சர்வதேச நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படாது எனவும் ஸ்ரீலங்காவில் வாசனைத்திரவியம் மற்றும் மதுசாரத்திற்கு தேவையான எத்தனோல் தயாரிக்க முடியும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பதிரன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேஇதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சீனி மற்றும் கரும்பு தொழிலாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு எத்தனோல் இறக்குமதி தடை விதிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஒரு சிலர் இந்த கட்டுப்பாட்டினை எதிர்த்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

எத்தனோல் இறக்குமதி தடுக்கப்படுவதால் நாட்டின் மதுசாரத்தின் தரம் குறைகின்றது என கூறுகின்றனர்.

ஆனால் அது பொய்யான குற்றச்சாட்டு, அதுமட்டும் அல்ல ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரும் எத்தனோல் கூட தரம் குறைந்த வர்க்கமே.

ஸ்ரீலங்காவில் மதுசாரம் மற்றும் வாசனை திரவங்களை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான எத்தனோல் எமக்கு கிடைக்கிறது.

இதற்கு சிறிய அளவிலான எதனோல் மாத்திரமே தேவைப்படும். ஆகவே இனிமேல் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதி செய்யப்படாது என்றார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்வதற்கும் எத்தனோல் பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.