
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது ஆரி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்,
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களே மீதமுள்ள நிலையில், ஆரி, பாலா, ஷிவானி, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் யார் ஜெயிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் காரில் இருந்தபடி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது ஆரியின் ரசிகர்கள் திடீரென ஆரி... ஆரி... ஆரி என கோஷமிட்டனர். இதைப்பார்த்த கமல், இன்ப அதிர்ச்சியில் திளைத்துப் போனார். இந்த வீடியோவை ஆரி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Adei #aari haters, pr gumbalnu kadharuvingale, idhuku enna solla poringa, silara set panni aari aarinu katha sonnangana .
— Dharsan (@dhars45) January 6, 2021
Haters nilamaya ninachadha paridhama iruku 😂 #biggbosstamil #BiggBossTamil4#AariArjunan@vijaytelevision @EndemolShineIND pic.twitter.com/hSyBBbjDcM